ஏர் இந்தியா 1932 – ம் ஆண்டு ஜே.ஆர்.டி. டாடா நிறுவனத்தினால் தொடங்கப்பட்டதை 1953 – ம் ஆண்டு மத்திய அரசு அரசுடமையாக்கியது.
பல ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா நிறுவனத்தை அக்டோபர் மாதம் – 2021 ம் ஆண்டு ரூ. 18,000 கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது.
ஏர் இந்தியாவின் மொத்த கடன் தொகை ரூ. 61,562 கோடி. அதில் ரூ. 46,262 கோடி ஐ மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. மீதம் இருந்த ரூ. 15,300 கோடி கடன் தொகையுடன் டாடா குழுமத்துக்கு விற்பனை செய்துள்ளது.
ஏர் இந்தியாவின் செயல்பாடுகளை சீர் செய்ய 100 நாள் திட்டமொன்றை டாடா குழுமம் வகுத்துள்ளது. காலதாமதமின்றி உரிய நேரத்தில் விமானம் கிளம்ப விமானம் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு விமான கதவுகளை மூட திட்டமிட்டுள்ளது.
பெரிய விமான நிறுவனங்கள் பட்டியலில் காலதாமதமின்றி கிளம்புவதில் ஏர் இந்தியா நிறுவனம் கடைசி இடத்தில் உள்ளது. பயணிகளின் புகார்களை உடனுக்குடன் தீர்க்கவும் சேவைகளில் உள்ள குறைபாடுகளை தீர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா அளவில் பயணிகளின் புகார்கள் அடிப்படை எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. விமான பயணத்தின் போது பயணிகளுக்கான உணவின் தரத்தை உயர்த்தவும், ஊழியர்கள் சீருடைகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
விமானம் ஓட்டிகள் சம்பள குறைப்புக்கு விமான ஓட்டிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க பல சவால்களை மேற்கொள்ள காத்திருக்கும் டாடா நிறுவனம் அதில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.