இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக ஏடிஎம் உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம் மின்னணு வங்கி சாதனமாகும் இந்த ஏடிஎம் மூலம் நாம் நமது வங்கி கணக்கில் இருந்து சுலபமாக பணத்தை எடுக்கவும் பணத்தை செலுத்தவும் முடியும். நமது வங்கி கணக்கில் இருந்து மற்றவர்களுக்கு பணத்தை அனுப்பவும் செய்யலாம்.
நமது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை நாம் வங்கிக்கு செல்லாமல் ஏடிஎம் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஏடிஎம்மில் பணம் எடுக்க ஏடிஎம் கார்டு மற்றும் ரகசிய பின் தெரிந்தால் போதும். நமது ஏடிஎம் கார்ட் ரகசிய பின் மறந்துவிட்டான் ஏடிஎம் மிஷின் மூலம் ரகசிய பின் புதுப்பித்துக் கொள்ளலாம். நமது பரிவர்த்தனை செய்து கணக்குகளையும் பார்த்துக் கொள்ளலாம்.
இதற்கு முன்பு எந்த வேலை என்றாலும் வாங்கிக்கு நேரடியாக சென்று நாம் எல்லாம் பார்த்துக் கொள்ள முடியும். ஏடிஎம் மூலம் வாடிக்கையாளர்கள் தனது பணிகளை மிகவும் எளிமையாக பயன்படுத்த முடிகிறது.
டிசம்பர் 2021 எடுத்த கணக்கின்படி இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிகப்படியான ஏடிஎம் மெஷின்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவித்தது படி தமிழ்நாட்டில் 28,540 ஏடிஎம் முன்னதாக தெரிவித்துள்ளது. இரண்டாவதாக மகாராஷ்டிராவில் 27,940 ஏடிஎம் உள்ளதாக தெரிவித்துள்ளது. மூன்றாவதாக உத்திர பிரதேசத்தில் 23,460 ஏடிஎம் உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.