நாம் பச்சை குத்தும் இடத்திற்கு செல்லும் போதும் ஊசி மாதிரி ஒன்றை வைத்து
நம் உடலில் செலுத்துவார்கள்.  நம் உடலில் தோள்கள் மூன்று அடுக்குகளில்
இருக்கின்றன.  நம்முடைய உடலில் பச்சை குத்தும்போது இரண்டாவது அடுக்கு
வரை அந்த பச்சை குத்தும் மையானது செல்லும்.

முதல் அடுக்கு தோலிலுள்ள பச்சைகள் விரைவில் அழிந்துவிடும். இரண்டாவது
அடுக்குகளில் உள்ளது அப்படியே இருக்கும்.  நம் உடலில் ஏதாவது ஒன்று புதிதாக
வந்தால் அதை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தி போராடும் அதேபோல் இந்த பச்சை
குத்திய மை உள்ளே சென்றதும் அதை எதிர்த்து போராடும் இவ்வாறு உள்ளே வந்த
மையை அது பிடித்து வைத்து கொள்ளும். இதனால்தான் அந்த மையானது
உடலில் பரவாமலும் பச்சை அழியாமலும் இருக்கும்.  செல் அழியும்வரை மை
அப்படியே இருக்கும். 

பச்சை குத்திய இடம் சூரிய ஒளியில் அதிகம் பட்டால் நாம் பச்சை குத்தியது
மறையலாம் என கூறுகின்றன. அதைப்போல் நம் உடலில் பச்சை குத்திய
இடத்தில் உள்ள செல்கள் அழிந்து புது செல்கள் வரும்போது பச்சை குத்திய இடம்
மறையலாம் என ஒரு சிலர் கூறுகின்றனர்.

நம் உடலில் பச்சை குத்திய இடத்தில் காயங்கள் அதிகமாக காணப்படும்.  அந்த
காயத்தை சரிப்படுத்த நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் பயன்படும் இதன்
அடிப்படையில் சில மாதங்கள் ரத்தம் கொடுக்க கூடாது என மருத்துவர்கள்
கூறுகின்றனர். இதேபோல் ஒருசில அரசு வேலைகளுக்கும் பச்சை குத்தினால்
வேலையில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

Leave a Comment

Click to Chat