தண்ணீரில் ஊறவைத்தாலே சோறு போல் மாறும் மேஜிக் அரிசி ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்தாலே சாப்பிடுவதற்கு தயாராகும் அரிசியை ஸ்ரீராமுலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் அறுவடை செய்கிறார். இவர் இயற்கை வேளாண்மை ஆர்வலராக இருக்கிறார். இதனை வேகவைக்க நெருப்பு தேவையில்லை தண்ணீரில் ஊற வைத்தாலே போதும் சாப்பிடுவது போல் மாறி விடும்.
ஆச்சரியமூட்டும் வகையில் இந்த அரசு உள்ளது உடலுக்குத் தேவையான சத்தும் இந்த அரிசையில் உள்ளது. இதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் ஆவதற்கு கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
ஸ்ரீகாந்த் ஆரம்பத்தில் ரசாயன விவசாயத்தில் செய்தவர் தற்பொழுது இயற்கை விவசாயத்தை செய்து வருகிறார் 9 மாநிலங்களுக்கு சென்று 120 நெல் வகையை சேகரித்தார்.
அசாமில் இருந்து மேஜிக் அரிசியை கொண்டு வந்து விவசாயம் செய்தார் இந்த அரிசி 30 முதல் 40 நிமிடம் வரை ஊற வைத்தால் சோறாக வந்து விடும். இது அரிய வகை அரிசி எனக் கூறப்படுகிறது.
இந்த அரிசியின் பெயர் போக்கோசால் என அழைக்கப்படுகிறது. நடவு செய்ததில் இருந்து 140 நாளுக்குள் அறுவடை செய்யலாம். சாதாரண தண்ணீரை ஊற்றினால் ஆறுன சோறாகவும் சுடு தண்ணீரை ஊற்றினால் சுடுசோறுகவும் மாறிவிடுகிறது. இந்த அரிசியில் 10.37% நார்ச்சத்து உள்ளது.
இந்த அரிசி அசாமில் விளைவிக்கப்படுகிறது. பெரும்பாலும் மலைவாழ் மக்கள் பயன்படுத்துவர் இராணுவ வீரர்களுக்கு இந்த அரிசியை உணவாக உட்கொள்கின்றன. இந்த அரசியின் செரிமானத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.