உடல் உறுப்பு தானம் ஆனது நாம் இறந்த பிறகு நமது உடலிலிருந்து ஒருசில உறுப்புகளை எடுப்பார்கள் அதேபோல் நாம் உயிரோடு இருக்கும்போது ஒரு சிலவற்றை தானமாக வழங்கலாம்.
நாம் உயிருடன் இருக்கும்போதே ஒரு சில பொருட்களை தானம் செய்யலாம். இரத்தம் தானம் செய்யும் போது இரத்தம் நமக்கு இயல்பாகவே ஊர செய்யும். நமக்கு இரண்டு கிட்னியும் நன்றாகவே இருக்கும் போது ஏதேனும் ஒரு கிட்னியை உயிரோடு இருக்கும்போது தானம் செய்யலாம். மற்றொரு கிட்னி தானாகவே அனைத்து வேலைகளையும் செய்யும். அதைப்போல் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுக்கும் போது மற்றொரு பகுதி அதுவாகவே வளரவும் செய்யும்.
உயிரோடு இருக்கும்போது நாம் தானம் செய்யும் போதும் மற்ற உறுப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும் அவ்வாறு பராமரிக்கவில்லை என்றால் பல பிரச்சினைகள் நமது உடலில் ஏற்படும்.
உடல் உறுப்பு தானம் இரண்டு வகைப்படும் ஒன்று இயற்கை மரணம் மற்றொன்று மூளைச்சாவு அடைபவர்கள். இயற்கை மரணம் அடைந்தவர்கள் தோல், எலும்பு, கார்னியா, இதயம் போன்றவை தானம் செய்யலாம்.
மூளைச்சாவு அடைபவர்கள் பெரும்பாலும் விபத்தில் உள்ளவர்களே மூளைச்சாவு அடைவார்கள் அவர்கள் உடலிலிருந்து கிட்னி, கணையம், சிறுகுடல், கல்லீரல் போன்ற 25 உறுப்புகளை தானமாக எடுக்கின்றனர். மூளைச்சாவு அடைந்து விட்டார்களா என்பதை கண்டறிய பல மருத்துவர்கள் பரிசோதித்து சொல்ல வேண்டும். அவ்வாறு சொன்னால் தான் உடல் உறுப்பு தானங்கள் செய்ய முடியும்.
உடல் உறுப்பு தானங்கள் செய்ய விரும்புவோர் நமது அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று நான் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புகிறேன் என்று கூறினால் அவர்கள் ஒரு படிவம் தருவார்கள் அதை நாம் நிரப்பிக் கொடுக்க வேண்டும். அல்லது நாம் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும்போது சொன்னால் அவர்களே நமது டிரைவிங் லைசென்ஸ்சில் பதிவு செய்து விடுவார்கள். அல்லது www.tnos.org என்ற இணையத்தில் நாம் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் தமிழ்நாடு தான் உடல் உறுப்பு தானங்களில் முதல் இடத்தில் உள்ளது.