நாம் அனைவரும் வாங்கிய மற்ற கடன்களை விட கிரெடிட் கார்டுக்கு வாங்கிய பொருளுக்கு கட்டணம் செலுத்த அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போனால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும்.
ஏற்கனவே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது தெரியும். ஆனாலும் நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகும் இதற்கு உரிய நேரத்தில் கையில் பணம் இல்லாமல் இருப்பது அல்லது மாத கடைசி என பல காரணங்கள் உள்ளன.
கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டு மீது புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜீலை மாதத்தில் பிறப்பித்தது.
ஒருவேளை ஒருவர் கிரெடிட் கார்டு தவணையை உரிய நேரத்துக்குள் கட்ட தவறினால் இந்திய ரிசர்வ் வங்கியில் வழிகாட்டுதல்களை கிரெடிட் கார்டு வழங்கும் அமைப்பு கடன் பாக்கி அட்டையாக அறிவித்துவிடும்.
கிரெடிட் கார்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி அட்டையை வழங்குபவர் எத்தனை நாள் காலதாமதம் ஆகிறதோ அந்த நாள்களை கணக்கிட்டு செலுத்த வேண்டிய தேதியிலிருந்து அபராத தொகையையும் கணக்கிட்டு கட்ட வேண்டும் என ரிசர்வ் வங்கி விதிமுறை சொல்கிறது.
செலுத்த தவறிய கட்டடத்துக்கு தாமதமாக கட்டணம் செலுத்தினால் அபராத தொகையையும் வசூலிக்கப்படும். அபராதம் செலுத்த தவறிய தொகைக்கு மட்டுமே அபராதம் வசூலிக்கப்படும். கட்ட வேண்டிய மொத்த தொகைக்கும் அபராதம் வசூலிக்கப்படாது.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அபராத தொகை மற்றும் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் கட்ட வேண்டிய முழு நிலுவைத் கட்டணத்தையும் கட்டிய பிறகே கிரெடிட் கார்டு வேண்டாம் என்று ஒப்படைக்க முடியும்.
ஒருவர் கிரெடிட் கார்டு வேண்டாம் என்று நினைத்தால் RBI வழிகாட்டுதல் படி அதனை ஏழு நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்பது நடைமுறை.