இரத்த தானம் கொடுக்க வேண்டும் என்றால் எல்லாராலும் கொடுக்க முடியாது ஒரு சிலரால் மட்டும் கொடுக்க முடியும் அவ்வாறு கொடுப்பதால் நமது உடலில் சில நன்மைகள் ஏற்படும். யாரெல்லாம் இரத்தம் கொடுக்கலாம் இரத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
இரத்தம் கொடுக்க விரும்புவோர் 18 முதல் 65 இருக்க வேண்டும். ஹீமோகுலோபின் அளவு 12.5 கி / பெசிலிட்டி இருக்க வேண்டும். குறைந்தது 45 கிலோ எடை இருக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தாலும் இரத்த தானம் செய்ய முடியாது.
இரத்த தானம் கொடுப்பதால் மாரடைப்பு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். ஒருமுறை நாம் ரத்தம் கொடுக்கும் போதும் 350 முதல் 400 Ml வரை இரத்தம் எடுக்க படுகிறது. 650 கலோரிகள் நமது உடலில் எரிக்கப்படுகிறது. 45 வயதுக்கு மேலே உள்ள பெண்களுக்கு மாரடைப்பு மற்றும் இருதய நோய் வரலாம் என்று சொல்கிறார்கள் ஆனால் ரத்ததானம் கொடுப்பவர்களுக்கு இந்த பிரச்சனை வராது என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், கிட்னி பெயிலியர், எச்ஐவி போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டு உள்ள நபர்கள் ரத்தம் கொடுக்க கூடாது மற்றும் தொடர்ந்து மாத்திரை சாப்பிடு நபர்களும் ரத்தம் கொடுக்க கூடாது. மது அருந்தியவர்கள் 24 மணி நேரத்துக்குள் இரத்தம் கொடுக்க கூடாது. மலேரியா இருந்தால் 3 மாதம் வரைக்கும் இரத்தம் கொடுக்க கூடாது. போதை பொருளுக்கு அடிமையாய் உள்ளவர்கள் பச்சை குத்தியவர்கள் இரத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இரத்தம் கொடுத்த உடனே 15 முதல் 20 நிமிடம் வரை ஓய்வு எடுக்க வேண்டும். 24 மணி நேரத்துக்கு கடினமான வேலையை தவிர்க்க வேண்டும். 3 மாதத்திற்கு இரத்த தானம் செய்யலாம்.