இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் வங்கியில் கணக்கு துவங்கி வைத்திருப்போம். அந்த வங்கி கணக்கை நாம் பயன்படுத்தவில்லை என்றால் என்ன நடக்கும் என நாம் பார்ப்போம்.
ஒரு வருடத்திற்கு நாம் வங்கி கணக்கு பயன்படுத்தவில்லை என்றால் வங்கி In Active நிலமைக்கு வந்து விடும். இன்னும் ஒரு வருடத்திற்கு வங்கி கணக்கை பயன்படுத்தவில்லை என்றால் வங்கி கணக்கு செயலிலந்துவிடும்.
வங்கி கணக்கை பயன்படுத்தாமல் இருப்பதற்கும் Cibil Score க்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. சிபில் ஸ்கோர் குறைக்கபட மாட்டாது.
வங்கியில் கடன் வாங்கி கட்டாமல் விட்டால் சிபில் ஸ்கோர் குறையும்.
வங்கி கணக்கு இரண்டு வருடம் பயன்படுத்தாமல் பின்பு பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நாம் வங்கி சென்று நமது அடையாள ஆவணங்களை கொடுக்க வேண்டும். வங்கியில் இதனை சரி பார்த்து Fine தொகை கட்ட சொல்லுவார்கள் அதனை கட்டிய பிறகு வங்கி கணக்கை ஆக்டிவேட் (Active) செய்வார்கள். பின்பு வங்கி கணக்கை பயன்படுத்தலாம்.
வங்கி கணக்கை நான் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் வங்கிக்கு சென்று வங்கி கணக்கை மூட வேண்டும் என்று சொன்னால் வங்கி கணக்கை மூட தொகை கேட்பார்கள் கொடுத்தால் வங்கி கணக்கை மூடி விடலாம்.