1978 ம் ஆண்டு பிரிட்டனில் முதல் முறையாக வாடகை தாய் திட்டம் அறிமுகபடுத்தப்படடது. 90’s ல் இந்தியாவிற்கு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
கணவன் அல்லது மனைவி இவர்கள் இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மை இல்லை என்றால் இவர்கள் ஒருவரின் உயிரணுக்களை எடுத்து கருமுட்டையாக மாற்றி அந்த கருமுட்டையை இன்னொரு பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தை பெற்றுக்கொள்வது வாடகை தாய் எனப்படுகிறது.
இதில் அநேக முறைகேடுகள் நடப்பதால் வாடகை தாய் நடைமுறை சட்டம் 2021 ல் கொண்டுவரப்பட்டது.
மருத்துவ காரணங்களுக்காகவும், குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் தம்பதியர் ஒரு பெண்ணின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
அப்படி பிறக்கும் குழந்தை அந்த விருப்பத் தம்பதியரின் உயிரியல் குழந்தையாகவே சட்டபூர்வமாக கருதப்படும்
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்
தம்பதியின் வயதும் 25 முதல் 55க்குள் இருக்க வேண்டும்.
மருத்துவம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாமை தொடர்பாக உரிய மருத்துவ சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
யார் வாடகை தாயாக இருக்கலாம்:
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும்.
25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் மருத்துவ ரீதியில் உடல் தகுதியை கொண்டிருப்பவராகவும் இருத்தல் அவசியம்.
தம்முடைய வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே அவர் வாடகை தாயாக இருக்க முடியும்.
தனியாக வாழும் ஆண், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியற்றவர் ஆவார்.
ஒரு கைம்பெண் அல்லது விவாகாரத்து பெற்ற பெண், வாடகை தாயாக இருக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.