ஆங்கிலத்தில் Blue Bugging (ப்ளு பகிங்) என  அழைக்கப்படும் Bluetooth நாம் பயன்படுத்தும் செல்போனில் இருக்கும் இந்த ப்ளூடூத் ஆனது தகவல்கள் பரிமாற பயன்படுகின்றது. இந்த ப்ளூடூத் தால் வரும் ஆபத்துகள்.

தற்பொழுது சைபர்கிரைம் குற்றவாளிகள் ப்ளூடூத் மூலம் நமது டேட்டாக்களை திருடுகின்றனர். அவர்கள் எவ்வாறு தமது டேட்டாக்களை திருடுகிறார்கள் என பார்ப்போம்.

நாம் நமது ப்ளூடூத் மூலம் தகவல்களை பரிமாறிவிட்டு ப்ளூடூத் ஐத் ஆப் செய்ய மறந்து விடுவோம் இவ்வாறு மறக்கும் பொழுது Blue Bugging சைபர் கிரைம் குற்றவாளிகள் அவர்கள் Device on செய்து விடுவார்கள். அவர்கள் ஆண் செய்த உடனே எந்த மொபைல் போன் ப்ளூடூத் ஆப் பண்ணாமல் இருக்கிறதோ அந்த மொபைல் போனை Hack செய்து விடுவார்கள்.  நமது மொபைலில் உள்ள டேட்டாக்கள் அனைத்தையும் எடுத்துக்கொள்வார்கள்.

நமது மொபைலை அவர்களே பயன்படுத்தவும் செய்வார்கள் நமது மொபைலில் உள்ள  கடவுச்சொல் அனைத்தும் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். நமக்குத் தெரியாமலே நமது மொபைலில் ஒரு Application ஐ தரவிரக்கம் செய்வார்கள். பின்பு நமது மொபைலில் உள்ள தகவல்கள் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். பின்பு அவர்கள்  நமது மொபைல் போன் ஐ பயன்படுத்துவார்கள். இதனால் நமது மொபைலுக்கு வரும் குறுஞ்செய்தி அனைத்தையும் அவர்கள் படிப்பார்கள் நமது மொபைல் போனில் இருந்து மற்றவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்வார்கள். நமது மொபைல் க்கு வரும் OTP  ஐ அவர்களே பார்த்து நமது வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்வார்கள். நமது மொபைல் போனை முற்றிலும் அவர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.

இதனை நாம் எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்றாள் நமது மொபைல் போனில் நாம் பயன்படுத்தாமலே அடிக்கடி சார்ஜர் குறைந்து கொண்டே இருந்தால் மற்றும் நமது மொபைலில் இருந்து நமக்குத் தெரியாத நம்பர் யாருக்கேனும் அழைப்புகள் சென்றிருந்தால் நாம் சந்தேகப்பட வேண்டும். நமது வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போகிறது அல்லது நாம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று நமக்கு சந்தேகம் ஏதேனும் வந்தால் http://cybercrime.gov.in என்கிற இணையத்தில் நாம் சென்று புகார் அளிக்கலாம் அல்லது  155260 என்ற அலைபேசி நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம்.

இவ்வாறு சைபர்கிரைம் குற்றவாளிகள் நமது டேட்டாக்களை திருடுகின்றனர் இதனால் நாம் நமது மொபைல் போனில் தகவல்களை பரிமாறி முடித்ததும் ப்ளூடூத் ஆப் செய்து வைத்து விடவும்.

Leave a Comment

Click to Chat