கொசுக்களும் அவை பரப்பும் நோய்களும் வரலாற்றில் நடந்த அனைத்து போர்களையும் விட அதிக மக்களை கொன்றுள்ளன. உண்மையில் புள்ளி விவரங்களின்படி கொசு தான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம். ஆனால் கொசுக்கள் எல்லோரையும் ஒன்றுபோல் கடிப்பதில்லை. சிலரை அதிகமாக கடிக்கும் கொசுக்கள், வேறு சிலரை கடிப்பதில்லை இதற்கு காரணம்.
2018ல் மட்டும் சுமார் 7,25,000 இறப்புகளுக்கு காரணமாக அமைந்தது இந்த கொசு.
வெஸ்நைல் காய்ச்சல், ஜிகா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்கன் குனியா, மூளை அலர்ச்சி போன்ற பல்வேறு நோய்களை பரப்ப கூடியது இந்த கொசு ஆகும்.
ஆண் பெண் கொசுக்கள் மற்ற விலங்குகளை கடிக்காமல் வாழ முடியும். இனப்பெருக்க சுழற்ச்சியை முடிக்க பெண் கொசுக்கு இரத்தம் தேவைப்படும்.
மனித தோலில் இருந்து வெளிப்படும் வாடையே ஒரு சிலரை கடிக்க காரணமாக உள்ளது.
மனிதர்கள் மற்றும் எலிகளின் தோல் நுன்னுயிர் எதிர்ப்பு பெப்டைசை உருவாக்குகிறது. இது பேக்ட்ரியாக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது.