வைட்டமின் A, B, C என வரிசையாக வைட்டமின்கள் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த சுவை மிக்க உணவுதான் இந்த சக்கரவள்ளி கிழங்கு.
சக்கரை வள்ளி கிழக்கில் நார்சத்து, வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. புற்றுநோய் அபாயத்திலிருந்து காப்பது, கண்பார்வை நலன், குடல் இயக்க செயல்பாடு, மூளை செயல்பாடு, நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை அதிகரிப்பது போன்ற உடலின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகிறது.
கார்ப்ஸ் 41கி, புரதம் 4கி, கொழுப்பு 0.3கி, நார்ச்சத்து 6.6கி, ஆகிய சத்துக்கள் உள்ளது. மாங்கனீசு, காப்பர், பொட்டாசியம், நியாசின் ஆகியவை உள்ளன.
பளிச்சுன்னு கண்பார்வை:
சக்கரை வள்ளி கிழங்குகளில் பீட்டா கரோட்டின் நிறைந்து காணப்படுகிறது. ஆண்டி ஆக்ஸிடண்டு தான் காய்கறிகளில் காணப்படும் ஆரஞ்சு நிறத்திற்கு காரணம். ஆரஞ்சு நிற சக்கரை வள்ளி கிழங்குகளை உண்ணும் போது உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை தருகிறது.
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்:
சக்கரை வள்ளி கிழங்கு மூளை செயல்பாட்டில் ஆரோக்கியத்தை பாதுகாப்போம் நியாபக சக்தியை மேம்படுத்தியது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குடல் ஆரோக்கியம்:
சர்க்கரைவள்ளி கிழங்கில் கரையக்கூடிய மற்றும் கரையும் தன்மையற்ற இரண்டு விதமான நார்ச்சத்துகளும் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் உங்களின் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாப்பு:
சக்கரை வள்ளி கிழங்கில் காணப்படும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் கேன்சர் எதிர்ப்பு கூறுகளாகவும் செயல்படுகிறது. சிறுநீர்ப்பை குடல் வயிறு மற்றும் மார்பக புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை மந்த படுத்துவதாக அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத் தரவுகள் கூறுகின்றன.