அமைப்பின் பெயர்: அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி: 8 ம் வகுப்பு தேர்ச்சி
தகுதி: மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 4 அலுவலக உதவியாளர் காலியிடங்கள் உள்ளன. குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 3 அலுவலக உதவியாளர் காலியிடங்கள் உள்ளன. வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு இரவு காவலர் காலி இடம் உள்ளது. வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3 அலுவலக உதவியாளர் இடங்கள் உள்ளன.
சம்பளம்: ரூ. 15,700 முதல் 50,000 வரை.
வேலை: அலுவலக உதவியாளர், இரவு காவலர்.
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதித்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் இணைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.