மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நிதி உதவி திட்டம் என்னும் திட்டத்தின் கீழ் திருமணம் ஆகவுள்ள பெண்கள் ரூபாய் 50,000 பணமும் பெற்றுக் கொள்ளலாம் எவ்வாறு பணமும் நகையும் பெறலாம் என கீழே பார்ப்போம்.

திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் கல்லூரி படிக்கும் போது மாதம் மாதம் இலவசமாக ரூபாய் ஆயிரம் உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்கின்ற திட்டத்தை அரசு இந்த ஆண்டு முதல் அறிவித்துள்ளது.

பெற்றோரை இழந்தவர்களுக்கு உதவி தொகை கிடைக்கும். தந்தை அல்லது தாய் இருவரில் ஒருவரை இழந்தோர்க்கு உதவி தொகை கிடைக்கும்.

பெண்கள் கல்லூரி முடிந்திருந்தால் ரூ. 50000 பணமும் 8 கிராம் நகையும் கிடைக்கும். கல்லூரி முடிக்காத பெண்களுக்கு ரூ 25000 பணமும் 8 கிராம் நகையும் கிடைக்கும்.

பெற்றோர் இல்லை என்றால் அன்னை தெரசா ஆதரவற்றோர் திட்டம் இந்த திட்டத்தில் உதவி தொகை பெற வேண்டும் என்றால் பெண்களுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும் ஆண்களுக்கு 21 வயது முடிந்திருக்க வேண்டும் திருமணத்திற்கு 40 தினங்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.

தந்தை இல்லை என்றால் அந்தத் திட்டத்திற்கு ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை திருமண நிதி உதவி திட்டம் ஆண்டு வருமானம் ரூ. 72000 இருக்க வேண்டும்.

நாம் விண்ணப்பிக்க நாம் படித்த சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் வழங்க வேண்டும்.

நாம் இருப்பது மாநகராட்சி ஆணையம் என்றால் மாநகராட்சி ஆணையத்தில் கொடுக்க வேண்டும். ஊராட்சி ஆணையம் என்றால் ஊராட்சி ஆணையத்தில் கொண்டு போய் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

மேலும் விவரங்கள் அறிய 044-24351885 என்ற இலவச எண்ணை அழைத்து தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

Click to Chat