நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல வகையான உணவுகளை சாப்பிடுகிறோம். அந்த வகையில் கருப்பு உலர் திராட்சை ஊர வைத்து சாப்பிட்டால் நமக்கு கிடைக்க கூடிய நண்மைகளை நாம் பார்ப்போம். பல வகையான உலர் திராட்சை இருந்தாலும் நாம் இன்று பார்க்க கூடிய ஒன்று கருப்பு உலர் திராட்சை. இந்த கருப்பு உலர் திராட்சையில் பல வகையான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் உள்ளது.
அனிமியாவை குணமாக்கும்:
அனிமியா என்னும் இரத்த சோகையால் அநேக பேர் பாதிக்க படுவது உண்டு பெண்கள் மற்றும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுவது உண்டு. அவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று கருப்பு உலர் திராட்சை இரத்தத்திற்கு தேவையான இரும்பு சத்து காணப்படுகின்றது. 100 கிராம் உலர் திராட்சையில் 1.8 மி.கி இரும்பு சத்து உள்ளது.
மலச்சிக்கலை குணமாக்கும்:
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும். நாம் சாப்பிடும் உணவில் போதுமான நார்சத்து இல்லாதது காரணமாக இருக்கலாம். கருப்பு உலர் திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது ஊற வைத்து சாப்பிட்டு வர இதனால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
இரத்த அழுத்தத்தை சீராக்கும்:
இரத்த அழுத்தத்தை சீராக வைக்கக்கூடிய பொட்டாசியம் சத்து அதிக அளவில் கருப்பு உலர் திராட்சையில் காணப்படுகிறது. 100 கி கருப்பு உலர் திராட்சையில் 744 மிகி பொட்டாசியம் உள்ளது.
எலும்புகளை வலுவாக்கும்:
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்து தேவை என நாம் எல்லோருக்கும் தெரியும். கருப்பு உலர் திராட்சையில் கால்சியம் அதிக அளவு காணப்படுகிறது. நீரில் ஊற வைத்து சாப்பிடும்போது எலும்புகள் வலுப்பெறுகின்றன.
இரத்தத்தை சுத்தப்படுத்தும்:
நாம் சாப்பிடும் உணவுகளில் ஒரு சில உணவுகளை ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதுபோல கருப்பு உலர் திராட்சையில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. தண்ணீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தை சுத்தப்படுத்தும்.