சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள கீழவாணியங்குடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், பண்ண முத்து, மாயழகு, பாலமுருகன், நாகேந்திரன் ஆகிய ஐவரும் சேர்ந்து நேற்று கீழ வாணியங்குடி பகுதியில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் நடத்தியதாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் பற்றி சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் சார்பு ஆய்வாளர் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் இப்புகாரின் அடிப்படையில் சிவகங்கை நகர் காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் வேல்முருகன், பண்ண முத்து, மாயழகு, பாலமுருகன், நாகேந்திரன் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.